பெங்களூரு: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, பெங்களூருவில் நடந்த பேரணியில், மேடை ஏறி, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என, முழக்கமிட்ட, இளம் பெண் அமுல்யாவின் தந்தை, தனது மகளின் செய்கைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, 'திப்பு சுல்தான் யுனைடெட் பிரண்ட்' என்ற அமைப்பு, பெங்களூரு சுதந்திர பூங்கா அருகில் நேற்று மாலை போராட்டம் நடத்தியது. கூட்டம் துவங்கிய உடன், இளம்பெண் ஒருவர் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என, தொடர்ந்து மூன்று முறை கோஷமெழுப்பினார். கூட்டத்தில் கலந்து கொண்ட, ஐதராபாத் லோக்சபா தொகுதி எம்.பி.,யான அசதுத்தீன் ஒவைசியும், போலீசாரும், அந்தப் பெண்ணிடமிருந்த மைக்கை பிடுங்கி, பேச்சை நிறுத்தும்படி கூறினர். பின், போலீசார், அப்பெண்ணை, உப்பார்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
'எனது மகளை முஸ்லிம்கள் தவறாக வழிநடத்துகின்றனர்:' அமுல்யாவின் தந்தை வருத்தம்